காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
தனிமையில் வீட்டிற்கு வந்த கள்ள காதலன்! கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் தனது குடும்பத்துடன் கொளத்தூர் பகுதியில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் கடந்த 14 ஆம் தேதி சவாரிக்கு சென்றுவிட்டு அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடபெரும்பாக்கம் அருகே தலை இல்லாத நிலையில் சடலம் ஓன்று புதரில் கிடந்தது பற்றி அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் அது காணாமல் போன சுரேஷ்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் சுரேஷுக்கு பாடி பகுதியில் சாலையோர இட்லி கடை நடத்தி வந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் கார்த்திகாவின் வீட்டிற்கு செல்ல, அங்கு எதிர்பாராதவிதமாக கார்த்திகாவின் கணவர் வீட்டிற்கு வர, பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சுரேஷை தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து மயக்க நிலையில் இருந்த சுரேஷை கணவன் - மனைவி இருவரும் எதிர்வீட்டில் இருக்கும் இருவருடன் சேர்ந்து காரில் தூக்கி சென்று வடபெரும்பாக்கம் அருகே உள்ள புதர் ஒன்றில் வைத்து தலை வேறு, உடல் வேறாக அறுத்து வீசியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மனைவியின் கள்ள காதலனை அடித்து கொலைசெய்துள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.