கோர விபத்து... லாரி சக்கரத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... பரிதாபமாக பலியான சம்பவம்..!

கோர விபத்து... லாரி சக்கரத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... பரிதாபமாக பலியான சம்பவம்..!


Horrible accident... College students caught in the wheel of a lorry... Tragic incident..!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் கைல் தாமஸ் என்பவரும், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கிளமெண்டு ஜோஸ்வா என்பவரும் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தாமஸ் மற்றும் ஜோஸ்வா ஆகிய 2 பேரும் தாம்பரத்தில் இருந்து மோட்டார் வாகனத்தில் குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் தாம்பரம் சானட்டோரியம் அரசு சித்தா மருத்துவமனை அருகே சென்ற போது முன்னாள் சென்ற கார் டிரைவர் சடன் பிரேக் அடித்துள்ளார்.

college students

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவரும் கார் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கவே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த மினிலாரி ஒன்று அவர்கள் இருவர் மீதும் நீர் இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தாமஸ் மற்றும் ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோஸ்வா மற்றும் தாமஸ் ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.