தமிழகம்

பிரபல தனியார் மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமிரா! அச்சத்தில் மக்கள்!

Summary:

Hidden camera in toilet famous chennai hospital

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறைமுகமாக கேமிரா வைத்து பெண்களின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி உரிமையாளர் ஒருவர் பெண்கள் தங்கும் அறையில் ரகசியமாக கேமிரா வைத்து புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு மும்மையில் ஒரு பெண்கள் விடுதியில் இதே போன்று ஒன்று சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், அங்கு சுத்தி, இங்கு சுத்தி சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையில், சைதாப்பேட்டையில் உள்ள பிரபல சிறுநீரக கல் நீக்கும் மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கழிவறைக்குள் சென்ற பெண் ஒருவர், சந்தேகத்தின் பேரில் ரகசிய கேமிரா கண்டுபிடிக்கும் App மூலம் கழிவறையை நோட்டமிட்டுள்ளார். அதில் கழிவறையில் கேமிரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனே காவல் துறையில் புகார் கொடுத்தன் பேரில் மருத்துவமனைக்கு வந்த காவலர்கள் அங்கிருந்த கேமிராவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மருத்துவமனை ஊழியர் ஒருவர்தான் அந்த கேமிராவை பொருத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து பல பெண்களின் வீடியோவும் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு உண்டா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement