தமிழகம்

பெட்ரோல் பங்கில் பெண்கள் கழிவறையில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்! பதறிய பெற்றோர்!

Summary:

Hidden camera in pudukottai petrol bunk

ரகசிய கேமிரா மூலம் யாருக்கும் தெரியாமல் வீடியோ, புகைப்படம் எடுப்பது போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புதுக்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் அங்கு வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர் ரகசிய கேமிரா வைத்து புகைப்படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை அடுத்த கைகாட்டி என்னும் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கு ஒன்றில் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனில் அவர் வேலை செய்யும் பங்கில் உள்ள சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதனை அடுத்து பெட்ரோல் பங்க் நிருவாகம் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த பங்கில் வேலை செய்த பெண்களின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர்.

அதில், பெட்ரோல் பங்கில் உள்ள கழிவறையில் பிரபாகரன் ரகசிய கேமிரா வைத்து புகைப்படம் எடுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த புகைப்படங்களை பிரபாகரன் வேறு யாருக்கும் அனுப்பினாரா அல்லது அந்த பெண்களை மிரட்டினாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement