கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம்; தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம்; தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை



heavy rain in karnataka-flood alert in tamilnadu

கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்து கனமழை பெய்துவருகிறது . இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. 

124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதையடுத்து  அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையும் நிரம்பியதால் இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

kaveri

2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து  விடப்பட்டுள்ள 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் தமிழக எல்லையை கடந்து நே0ராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

kaveri

கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.