சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை! பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை!

சென்னையில் அதிகாலையில் இருந்து வெளுத்து வாங்கும் கனமழை! பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை!


heavy-rain-in-chennai-YF3H5E

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

 இந்நிலையில் சென்னையில் நேற்று வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் இன்று அதிகாலையிலும் சென்னையின் பல பகுதிகளில் திடீரென கனமழை கொட்டத் தொடங்கியது. 

சென்றனர். திருவான்மியூர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், கோட்டூர்புரம், அடையாறு, பெசன்ட் நகர், கே,கே,நகர், வேளச்சேரி, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம்  மற்றும் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை வெளுத்துவாங்கி வருகிறது.