சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்..!



heavy-rain-fall-in-chennai-over-full-night

நடப்பு ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இதற்கிடையே, சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், ஐயப்பந்தாங்கல் மற்றும் காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.