எஸ்.பி பாலசுப்ரமணியம் தற்போது எப்படி உள்ளார்..? மீண்டும் ஷாக் தகவலை கூறிய மருத்துவமனை அறிக்கை.!

எஸ்.பி பாலசுப்ரமணியம் தற்போது எப்படி உள்ளார்..? மீண்டும் ஷாக் தகவலை கூறிய மருத்துவமனை அறிக்கை.!


health-condition-of-singer-spb

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவரது உடல்நிலை கடந்தஹ் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு மோசமடைந்தது.

இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிவந்தது.

corona

ஆனால், கவலைப்படும்படி ஒன்றும் இல்லை, தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் சீராக இருக்கிறார். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்கிவருகின்றனர் என எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் அவர்கள் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அதேபோல் தனது தந்தையின் உடல்நிலை குறித்து இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், “நேற்றைப் போலவே இன்றும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. தீவிர சிகிச்சையில் இருந்தாலும் உடல்நிலை சீராக இருக்கிறது. எந்த ஒரு சிக்கலும் இல்லை. இது நல்ல அறிகுறி என மருத்துவர்கள் எண்ணுகிறார்கள். எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

இருப்பினும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர் எனவும்  மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.