தற்காலிக ஆசிரியருக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் கைது!Head master harassment to temporary teacher

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் வயது பள்ளி மாணவிகளுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

teacher

இந்த நிலையில் வால்பாறையை அடுத்த வாட்டர் பால் எஸ்டேட் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக குலசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

teacher

இதனையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியர் குலசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.