தமிழகம்

ஆபாச படம் காட்டி 9 பச்சிளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த எச்.எம்.. எச்சைத்தன செயல் அம்பலமான பகீர் பின்னணி.!

Summary:

ஆபாச படம் காட்டி 9 பச்சிளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த எச்.எம்.. எச்சைத்தன செயல் அம்பலமான பகீர் பின்னணி.!

செல்போனில் ஆபாச படங்களை காட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்காக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகாமையில் இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தொடர்ந்து  சின்னகொல்லப்பட்டி கிராமம் ,வசந்த நகரைச் சேர்ந்த தாமஸ் சாமுவேல்(57) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அங்கு பயின்று வரும் பள்ளி மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து, பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது தாயாரிடம் இதனை கூற, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பள்ளிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் இதுவரை 9 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது அம்பலமானது.

இதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Advertisement