பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு ஒத்திவைப்பு.! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.!Half yearly exams postponed

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்தநிலையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

school

இந்த நிலையில் தமிழக அரசு அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்றும் ஆன்லைன் தேர்வு பற்றி அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.