தமிழகம் சினிமா

பள்ளி ஆசிரியரை தத்தெடுத்த ஜிவி பிரகாஷ்; காரணம் என்ன..!!

Summary:

gv prakash offering for one school teacher

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டிய அரசானது பள்ளிகளை மூடுவதிலே குறியாக உள்ளது.

தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோர்களிடம் அதிகரித்துவிட்டது. கிராமப்புறங்களில் கூட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தல் இருப்பதே. 

சமீபகாலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.  

இந்த அவலநிலையை மாற்றி அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் புதிய ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.

gv prakash with school teacher க்கான பட முடிவு

அவர் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரை மூன்று ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார். அந்த ஆசிரியருக்கான மூன்று ஆண்டுகள் அளிக்கப்படும் சம்பளத்தை மற்றும் இதர செலவுகளை அவரே ஏற்றுள்ளார்.

மேலும் இதுபோன்று போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப் பள்ளிகளை கண்டெடுத்து அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தத்தெடுத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும் என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement