நெஞ்சம் கொதிக்கிறது! அந்தக் கொடூர மிருகங்களை.. ஆவேசத்தின் உச்சத்தில் ஜிவி பிரகாஷ்! எதனால் தெரியுமா?

நெஞ்சம் கொதிக்கிறது! அந்தக் கொடூர மிருகங்களை.. ஆவேசத்தின் உச்சத்தில் ஜிவி பிரகாஷ்! எதனால் தெரியுமா?


gv prakash angry on pollachi sex abuse issue

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி,200 பெண்களை மடக்கி அவர்களை  மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த கொடூரம் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீதி உள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

gv prakash

இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான  நடிகர் ஜிவி பிரகாஷ்  இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது அந்த மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.  மிருகங்களைவிட கேவலமான இந்த நான்கு பேரும் பெண்களை சித்திரவதை செய்து பாலியல் கொடுமைபடுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது இவர்களை பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்கு பேராபத்து என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 

மேலும் இவரது கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.