தமிழகம்

#வீடியோ: அம்முனி நீயும் - நானும்..! ஓடும் இரயிலில் புள்ளிங்கோ சேட்டை.. விழுந்தா பாலு தான்.!

Summary:

#வீடியோ: அம்முனி நீயும் - நானும்..! ஓடும் இரயிலில் புள்ளிங்கோ சேட்டை.. விழுந்தா பாலு தான்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை இரயில் நிலையத்தில் மின்சார இரயில் பயணம் செய்த மாணவி, தன்னுடன் பயின்று வரும் பள்ளி மாணவருடன் ஆபத்தான வகையில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து பயணிக்கும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

மின்சார இரயில் கவரைப்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து மெதுவாக புறப்பட தொடங்கியதும், மாணவி இரயில் படிக்கட்டில் கம்பியை பிடித்தவாறு நடைமேடையில் ஓடி, இரயிலின் வேகம் அதிகரித்ததும் ஒரு கால்களை நடைமேடையில் வைத்து உரசியபடி சாகசம் செய்து வருகிறார். பின்னணியில் கானா பாடலும் ஒளிபரப்பாகிறது.

அவருக்கு பின்புறம் இருக்கும் மாணவர், இரயில் கம்பியை பிடித்தவாறு நடைமேடையில் ஓடி இறுதியாக இரயிலின் வேகம் அதிகரித்ததும் இரயிலுக்குள் இருக்கிறார். இந்த வீடியோவை கண்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்பாராத விதமாக சிறுதவறு நிகழும் பட்சத்தில் உயிர்சேதம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுகின்றனர்.


Advertisement