ஆவின் பால் பாக்கெட்டில் இப்படி ஒரு ரகசியமா! வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் ரகசியம் - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சமூகம்

ஆவின் பால் பாக்கெட்டில் இப்படி ஒரு ரகசியமா! வெளிச்சத்திற்கு வந்த நீண்ட நாள் ரகசியம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை அடியோடு அழிக்க கடந்த ஆண்டு தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. அதன்படி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த அரசாணை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் அரசால் அனுமதி வழங்கப்பட்டது. எனவே தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தும் மறுசுழற்சிக்கு உகந்தவை என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆவின் அலுவலகத்தில் மறுசுழற்சிக்காக திரும்பப் பெறப்படும் எனவும் ஒரு பாக்கெட்டுக்கு பத்து பைசா வீதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு அனைத்து மக்களுக்கும் சரியாக சென்றடையாததால் ஆவின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட இதனைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலரான அமெரிக்கா நாராயணன் என்பவர் அவரது வீட்டில் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சிக்காக திருப்பிக் கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வீட்டில் பால் போடுபவருக்கு கூட இது குறித்து தெரியவில்லை. எனவே பல தனியார் ஆவின் முகவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர்களுக்கும் இந்த அறிவிப்பு குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அதன் பின்னர் பல முயற்சிகளுக்குப் பிறகு பெசன்ட் நகரில் உள்ள ஆவின் அலுவலகத்தில் காலியான பாக்கெட்டுகளை திரும்ப பெறுகிறார்கள் என்ற தகவல் அறிந்த நாராயணன் அவரது வீட்டில் சேமித்து வைத்திருந்த 210 காலியான பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த காலியான பால் பாக்கெட்டுகளை திரும்ப கொடுத்து 21 ரூபாய் பணம் பெற்றுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் படி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo