மேலதிகாரியின் பாலியல் தொல்லையால் வினோதமான முடிவெடுத்த பெண் , அதிர்ச்சியில் திகைத்துப்போன போலீசார் .!

மேலதிகாரியின் பாலியல் தொல்லையால் வினோதமான முடிவெடுத்த பெண் , அதிர்ச்சியில் திகைத்துப்போன போலீசார் .!government officer commits suicide by superior sex abuse

அரசு பெண் ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரி கொடுத்த பாலியல் தொல்லையால் பிளாஸ்டிக் பையால் தனது முகத்தை  மூடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கோரளம்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வருகிறார் .

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணிபுரியும்  மேலதிகாரி ஒருவர் ,அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

suicide

மேலும் இரண்டு நாட்களாக தமிழ்ச்செல்வி வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டு கதவை  தட்டியுள்ளனர்.ஆனால் கதவு திறக்காததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து சடலமாக கிடந்த தமிழ்செல்வியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.