எழுத, படிக்க தெரிந்தால் போதும் 50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!Government job for who have reading and written skills

அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக இருக்கும். படித்தவர்கள் சற்று எளிதாக முயற்சிக்கலாம். படிக்காதவர்கள் எப்படி அரசு வேலைக்கு செல்வது என்பது பற்றி கவலை இருக்கும். அந்த கவலைய விடுங்க. எழுத படிக்க தெரிந்தால் கூட உங்களுக்கு அரசு வேலை தயார்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கான தேதி வெளியாகியுள்ளது. இதை சுவாரசியம் என்னவென்றால் எழுத படிக்க தெரிந்தால் கூட அதிக சம்பளத்தில் சில வேலை வாய்ப்புகள் வெளியாகியுள்ளதுதான்.

மொத்தம் 109 காலி இடங்கலுக்குனா அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுகாதார பணியாளர், துப்புரவாளர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் போன்ற பணியிடங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%20_2018%20Tirunelveli_0.pdf