சென்னைக்கு ரயிலில் வந்த கச்சா எண்ணெய்.! விபத்து ஏற்பட்டு பற்றி எரியும் தீ!

goods train accident


goods train accident

ஆந்திராவில் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டத்தில் டீசல் பரவி திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்குச் சரக்கு ரயில் மூலமாகக் கச்சா எண்ணெய் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் விசாகப்பட்டினத்திலிருந்து 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் எடுத்து வரப்பட்டது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ஆயில் டேங்கர்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் இன்று காலை ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் அருகே வந்துகொண்டிருந்த போது சூர்ரெட்டிபாளையம் மற்றும் தங்கட்டூர் இடையே உள்ள மூசிநதி என்ற பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது.

சரக்கு ரயிலில் இருந்த டேங்கர்களில் கச்சா எண்ணெய் இருந்ததன் காரணமாக, கீழே விழுந்த அடுத்த சில நொடிகளில் 6 பெட்டிகள் வெடித்துச் சிதறின. அவற்றிலிருந்த கச்சா எண்ணெய் முழுவதுமாக எரிந்து கொண்டிருக்கிறது. தகவலறிந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

இதன் காரணமாக சென்னை மற்றும் விசாகப்பட்டினம் செல்லக்கூடிய ரயில் தடத்தில் ரயில் போக்குவரத்தானது தற்போது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.