பெண்களுக்கு செம சந்தோஷமான செய்தி! மளமளவென சரிந்தது தங்கம் விலை! அதுவும் எவ்வளவு தெரியுமா??

பெண்களுக்கு செம சந்தோஷமான செய்தி! மளமளவென சரிந்தது தங்கம் விலை! அதுவும் எவ்வளவு தெரியுமா??



gold-today-rate-details

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை பெருமளவில் உயர்ந்து வந்தது. மேலும் இந்த வாரம் துவக்கத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று வெகுவாக சரிந்துள்ளது.

அதாவது சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 110 ரூபாய் குறைந்து ரூ.4,910த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கம் 880 ரூபாய் குறைந்து 39,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold

மேலும் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,309  ரூபாய்க்கும் மற்றும் ஒரு சவரன் தங்கம் 42, 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமிற்கு 260 காசுகள் குறைந்து 74.10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 74,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.