அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: இல்லத்தரசிகளின் தலையில் விழுந்த இடி.. இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு... விண்ணைமுட்டும் தங்கத்தின் விலை.!
விடுமுறை நாளை முன்னிட்டு இன்றே தங்கம் விலை ஒட்டுமொத்தமாக உயர்ந்துவிட்டது.
உலகளவில் தங்கத்தின் மீதான விலை என்பது குறைவாக இருந்தாலும், இந்தியாவின் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, நுகர்வோரின் தேவை உட்பட பல காரணத்தால் விலை விண்ணைமுட்டி செல்கிறது.
கடந்த வாரத்தில் ரூ.41 ஆயிரத்தில் இருந்த சவரன் தங்கத்தின் விலையானது, கடந்த 6 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்று ஒரேநாளில் சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.5,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளி ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.74.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 74,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.