அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! 73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! இன்றைய விலை நிலவரம் இதோ...



gold-silver-price-hike-chennai-july2025

சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நிலைத்திருந்த நிலையில், இன்று மாறுபாடுடன் சந்தையில் விலை உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளதுடன், தற்போது ஒரு சவரன் 73,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தூய தங்கம் விலை தற்போது ஒரு கிராமுக்கு 9,987 ரூபாய்க்கும்,ஒரு சவரனுக்கு 79,896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.! குஷியில் நகைபிரியர்கள்! இன்றைய தங்கம் விலை நிலவரம்...

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 2 உயர்ந்த நிலையில், தற்போது ஒரு கிராம் ரூ. 127 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,27,000 க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு, சர்வதேச சந்தையின் மாற்றங்களால் நேர்ந்திருக்கலாம் என பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

இதையும் படிங்க: உச்சகட்ட மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்! இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்...