இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! திடீரென குறைந்த தங்கத்தின் விலை.!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! திடீரென குறைந்த தங்கத்தின் விலை.!



gold rate reduced

கொரோனா சமயத்தில் உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தநிலையில் சமீபத்தில் நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. 

தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 குறைந்து 4450-க்கும், ஒரு சவரனுக்கு 360 குறைந்து 35600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

gold rate

இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை, 8 கிராம் 38472-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
வெள்ளியின் விலை 1 கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து  73.60க்கு விற்பனையாகிறது. அதே போன்று 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.