தமிழகம்

திடீரென குறைந்த தங்கம் விலை.! உச்சகட்ட மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Summary:

சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 4,716 ஆக விற்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். 

இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 4,716 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,728 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைத்து, ஒரு கிராம் ரூ. 5,100 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement