தமிழகம்

தங்கத்தின் விலை அதிரடி குறைப்பு.! உச்சகட்ட குஷியில் இல்லத்தரசிகள்.!

Summary:

தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. 

சமீபத்தில் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 524 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக தங்கம் என்றாலே அதன் விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கமான ஒன்று. ஆனால் கொரோனா சமயத்தில் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே இருந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.


Advertisement