தமிழகம்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை 3-வது நாளாக குறைவு!

Summary:

gold rate reduced

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. 

கடந்த 7ம் தேதி சவரன் ரூ.43,328க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை அதிர்ச்சியடையவைத்தது. அதே நேரத்தில் தங்கம் விலை விரைவில் சவரன் ரூ.50,000ஐ கடக்கும் என்று நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இந்தநிலையில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது.  

இன்றைய நிலவரப்படி  ஒரு சவரன் ஆபரண  தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 1,832 -ரூபாய் குறைந்து, ரூ.40,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம்  ரூ 229 குறைந்து  ஒரு கிராம் 5,013- ஆக விற்பனையாகிறது.


Advertisement