
gold rate reduced
இந்தவருட புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமையான இன்று(மார்ச் 9) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,198-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் இன்றையதினம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.49.200 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.49,200 ஆகவும் விற்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் வெள்ளி விலை சற்று குறைந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது பொது மக்களிடையே எவ்வித மகிழ்ச்சியும் ஏற்படுத்தவில்லை.
Advertisement
Advertisement