தமிழகம்

மகிழ்ச்சியான செய்தி.!! தங்கம் விலை கடும் வீழ்ச்சி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

Summary:

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பி

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. 

தற்போது நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவருவதால், தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,654 ரூபாய்க்கும், சவரனுக்கு 37,232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.60 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.72.00க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,000 ஆக உள்ளது.


Advertisement