ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்க விலை.. சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது..! இன்றைய விலை நிலவரம் இதோ..!!

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்க விலை.. சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது..! இன்றைய விலை நிலவரம் இதோ..!!



Gold price details in chennai

இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, உலகளாவிய பொருளாதார பிரச்சனை போன்ற காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 40 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கத்தின் விலை, இன்றளவில் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் இருக்கின்றனர். 

Gold price details

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5630-க்கு விற்பனையாகிறது.