தமிழகம்

ஐயா என் ஆட்டை காணோம்.. அலறிய பெண்.. சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி வீடியோ.!

Summary:

சென்னை கொரட்டூர் போதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இந்திராணி என்ற பெண் ஒருவர் இரவு நேரத்தி

சென்னை கொரட்டூர் போதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இந்திராணி என்ற பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த இரண்டு ஆட்டையும் காணவில்லை என கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் இந்திராணி வசித்து வரும் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்துள்ளனர். அதில் காரில் வந்த தம்பதிகள் இரண்டு ஆட்டையும் திருடி காரில் ஏற்றி சென்றது பதிவாகியிருந்தது.

அதனையடுத்து போலீசார் காரின் நம்பர் பலகையை வைத்து ஆட்டை திருடி சென்ற தம்பதிகளை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement