தமிழகம்

பட்டப்பகலில் நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம் வெளியான பகீர் சிசி டிவி காட்சிகள்!

Summary:

Girl theft bike in chennai cctv video

சென்னையில் பட்டப்பகலில் ரோட்டில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை இளம் பெண் ஒருவர் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலாந்தூரை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக பூந்தமல்லியை அடுத்த கரையான் சாவடிக்கு தனது இரு சக்கர வாக்கத்தில் சென்றுள்ளார்.

அங்கு ஒரு கடையின் வெளியில் தனது வண்டியை சாவியுடன் மறந்து வைத்துவிட்டு அவர் கடைக்குள் சென்றுள்ளார். கடையில் இருந்து வெளியே வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை. இதுகுறித்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பார்த்தபோது தலையில் தலைக்கவசம் அணிந்த வாறு பெண் ஒருவர் வண்டியை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த காட்சியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீடீயோவை ஆராய்ந்த காவல் துறையினர் அந்த பெண் தலைக்கவசம் அணிந்திருந்ததால் முகம் சரியாக பதிவாகவில்லை என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெருவித்துள்ளனர். மேலும், அந்த பெண் வாகனத்தை திருடி சென்றாரா அல்லது அவரது வண்டி என நினைத்து மறதியில் எடுத்து சென்றாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.


Advertisement