காலையிலேயே இதுதான் பொழப்பா? மகள் செய்த காரியத்தால் கடுப்பான தாய்! அடுத்த சில நிமிடங்களிலேயே நேர்ந்த விபரீதம்!

காலையிலேயே இதுதான் பொழப்பா? மகள் செய்த காரியத்தால் கடுப்பான தாய்! அடுத்த சில நிமிடங்களிலேயே நேர்ந்த விபரீதம்!


girl-suicide-for-mother-scolding

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்  ரகுபதி. இவர் வெல்டிங் தொழில் செய்துவருகிறார். இவருக்கு வித்யாஸ்ரீ என்ற மகள் உள்ளார். அவர் திருவொற்றியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வித்யாஸ்ரீ  அடிக்கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். மேலும் பப்ஜி கேம் விளையாடுவதற்காகவே அவர்.காலையில் சீக்கிரமாக எழுந்து வந்துள்ளார்.

இவ்வாறு நேற்று காலையிலும் அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இவ்வாறு எப்பொழுதுமே செல்போனும் கையுமாக இருந்த அவரை அவரது தாய், காலையிலேயே செல்போன்ல என்னதான் பார்க்கிறாய் என கடுமையாக திட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.இதில்  ஆத்திரமடைந்த வித்யாஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

இந்நிலையில், கடைக்கு சென்றுவிட்டு அவரது தாய் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு மூடியிருந்துள்ளது. இந்நிலையில் அவரது தாய் கதவை திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் பதறிப்போன அவர், அக்கம்பக்கத்தினரை  அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மகள் தூக்கில் தொங்கியுள்ளார்.இதனைக் கண்டு அவரது தாய் கதறி அழுதுள்ளார்.

பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வித்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்கள் வித்யாஸ்ரீ அவரது அம்மா திட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.