காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம், பதற்றத்தில் இளைஞன் செய்த செயல், வெளியான அதிர்ச்சி சம்பவம்.!

காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம், பதற்றத்தில் இளைஞன் செய்த செயல், வெளியான அதிர்ச்சி சம்பவம்.!


girl-suddenly-dead-while-happy-with-lover

தனது மகளை காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில்போலீசாரால்  தேடப்பட்டு வந்த கஸ்தூரி என்ற இளம்பெண் உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தில் வசித்து வருபவர் கஸ்தூரி. 19 வயது நிறைந்த இவர்  நர்சிங் படித்துள்ளார்.மேலும்  இவர் ஆலங்குடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநராக இருந்த  நாகராஜன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் மாங்காடு தைலமர காட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.அந்நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கஸ்தூரி உயிரிழந்துள்ளார் .

kasthuri

மேலும்  இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன், கஸ்தூரியின் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் அருகே உள்ள அம்புளி ஆற்றின் பாலத்தின் அடியில் போட்டுவிட்டு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நாகராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும், நாகராஜனுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என, கீரமங்கலம்-அறந்தாங்கி சாலையில் பனங்குளம் மற்றும் பெரியாளுர் விளக்கு ஆகிய இடங்களிலும் பேருந்து மறியல் நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.