ரூம் போட்டு இளைஞருடன் உல்லாசமாக இருந்த பேஷன் டிசைனர் பெண்..! பேஸ்புக் காதலால் மொத்தத்தையும் இழந்த பரிதாபம்.!

ரூம் போட்டு இளைஞருடன் உல்லாசமாக இருந்த பேஷன் டிசைனர் பெண்..! பேஸ்புக் காதலால் மொத்தத்தையும் இழந்த பரிதாபம்.!



Girl lost money and jewels through Facebook love

பேஸ்புக் காதலனை நம்பி திருமணம் முடிந்த பெண் ஒருவர் 30 சவரன் நகை, 5 லட்சம் பணத்தை  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ககன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ஏற்கனவே திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். இவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் பேஷன் டிசைனரான அந்த பெண் பேஸ்புக் மூலம் லோகேஷ் குமார் என்பவருடன் நட்பாக பழகிவந்துள்ளார்.

அந்த பெண்ணின் நிலைமையை புரிந்துகொண்ட லோகேஷ் குமார் ஆசை வார்த்தை கூறி காதல் வலை வீசியுள்ளார். அந்த பெண்ணும் லோகேஷ் குமார் கூறியதை கேட்டு நம்பி அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறிய லோகேஷ் குமார் அவரை பலஇடங்களுக்கு வெளியே அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

உல்லாசத்தின்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களையும் லோகேஷ் குமார் எடுத்துள்ளார். இப்படியே நாட்கள்  செல்ல செல்ல, ஒரு கட்டத்தில் தன்னுடைய தொழிலை விரிவு செய்ய வேண்டும் என லோகேஷ் குமார் அந்த பெண்ணிடம் பணம் கேட்க, அவரும் தன்னுடைய 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்சம்  ரூபாய் பணத்தை லோகேஷ் குமாரிடம் கொடுத்துள்ளார்.

 பணம் மற்றும் நகைகளை வாங்கியபிறகு லோகேஷ் குமாரின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் லோகேஷ் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை திருப்பித்தரும்படி அந்த பெண் கேட்க, பணம் மற்றும் நகைகளை கேட்டால் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவேன் என லோகேஷ் குமார் மிரட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக லோகேஷ் குமாரின் அம்மாவை சந்தித்த பேசியுள்ளார், அவரோ அந்த பெண்ணை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அடித்து விரட்டியதோடு, தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.

இதனால் வேறுவழி தெரியாமல் அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்த பெண்  கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் லோகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேஸ்புக் மூலம் அடையாளம் தெரியாத ஒருவரை நம்பி இளம் பெண் ஒருவர் பணம் மற்றும் நகைகளை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.