காதல் – உறவுகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துவந்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்.! வீட்டிற்குள் நுழைந்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

Summary:

girl killed by illegal lover

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கட்டகஞ்சம்பட்டியில் வசித்து வந்தவர் திருமுருகன். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி .

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அவரது தந்தை அங்காளஈஸ்வரி கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால்  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தந்தை காளிமுத்து இதுகுறித்து காவல் நிலையத்தில்புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்காள ஈஸ்வரிக்கு, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அடைக்கலம் என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அங்காளஈஸ்வரி அடைக்கலத்திடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் 2 லட்சம் வரை பணமும் அவரிடமிருந்து பெற்றுள்ளார்.

 இந்நிலையில் இதுதொடர்பாக இருவருக்கும் சமீபகாலமாக பிரச்சினை எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சமீபத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த அடைக்கலம் அங்காள ஈஸ்வரியின் கழுத்தை நெறித்துள்ளார் இதில் அவர் மயக்கமடைந்த நிலையில் அடைக்கலம் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்தே அங்காள ஈஸ்வரி உயிரிழந்தது தெரியவந்ததுமேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அடைக்கலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


Advertisement