குளியலறையில் இரத்தத்தில் எழுதியிருந்த வாசகம்.! வேலைக்கு சென்று வீடு திருப்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! நடந்தது என்ன?

girl kidnapped by someone police investigation


girl-kidnapped-by-someone-police-investigation

சேலத்தில், சின்னதிருப்பதி பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ் செல்வி. ஹரிஹரன் ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ஹரிஹரன் வேலை முடித்துவிட்டு வழக்கம் போல இரவு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது தமிழ்செல்வி வீட்டில் இல்லை.

இந்நிலையில் ஹரிஹரன் வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. மேலும் வீட்டின் குளியல் அறையில், விமல் ஆளுங்க... காப்பாற்றுங்கள் ஹரி என்று இரத்தக்கறையில் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி வீட்டின் உள்ளே இரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டையும் கிடந்துள்ளது.

blood

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். 

மேலும் ஹரிஹரன் மற்றும் அவரிடம் பணியாற்றும் விமல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் செல்வி எங்கே போனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.