தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இளம் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் செல்வராணி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் இரவு நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அந்த வீட்டை மறைந்திருந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் பெண் புரோக்கர் கீதா என்பவர், 17 வயது இளம்பெண்ணை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து புரோக்கர் கீதாவை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அங்கிருந்து சிறுமியை மீட்டனர். அதன் பின்னர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலியல் புரோக்கர் கீதாவை சிறையில் அடைத்தனர். சிறுமியை செங்கல்பட்டில் உள்ள சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.