தமிழகம் இந்தியா உலகம்

13 வயதிலேயே 3 டிகிரிகளா? அசத்தும் தமிழக மாணவி!! எபப்டி தெரியுமா?

Summary:

girl got 3 degree in 13 years

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீயா. 13 வயது நிறைந்த இவர் அமெரிக்காவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தாய் மொழியின் பெருமையை உணர்ந்த இவர் 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்த நிலையிலும் நன்றாக தமிழ் பேசி வருகிறார்.

ஸ்ரீயா தனது 13 வயதிலேயே பள்ளி படிப்புகளை முடித்து,  3 டிகிரிகளை பெற்றுள்ளார்.அது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை குறித்து கூறுகையில், ஸ்ரீயாவின் சகோதரர் பிரணவ் நான்காம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரி படிப்பை படிக்க துவங்கியுள்ளார்.தொடர்ந்து 16 வயதில் அவர் 4 டிகிரிகளை பெற்றுள்ளார். மேலும் தற்பொழுது அணு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளார். 

இதனை தொடர்ந்து தனது சகோதரனை கண்டே ஸ்ரீயாவும் தனது படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயா தற்பொழுது ரோபோ தொடர்பாக ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளார். மேலும் அவர் எளிதாக கல்வி கற்க யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இந்நிலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஸ்ரீயா தற்போது தனது விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளார். 
 


Advertisement