தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான அன்றே தாலியை கழற்றி வீசிவிட்டு, இளம்பெண் செய்த காரியம்!! கொந்தளித்துப் போன பெற்றோர்கள்.!

Summary:

girl elope with lover at her marriage day

திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி பூங்காவனம். இவர்களுக்கு குமார் என்ற மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இவரது  காதல் விவகாரம் ஈஸ்வரியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மகள் தங்களது பேச்சை கேட்காத நிலையில் அவசர அவசரமாக வேறு ஒருவருடன் ஈஸ்வரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் அத்திருமணத்தை சிறிதும் ஏற்றுக்கொள்ளாத ஈஸ்வரி திருமணமான அன்றே தனது தாலியை அறுத்து எறிந்துவிட்டு, ஊரை விட்டு வெளியேறியுள்ளார்.பின்னர் குமாரும், ஈஸ்வரியும் ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு சென்றுள்ளனர். 

இவர்களது திருமணம் குறித்து தகவல் அறிந்த ஈஸ்வரியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குமாரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

illegal affairs க்கான பட முடிவு

மேலும் கொடையம்பாக்கம் கிராமத்தினர் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட குமார் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து, அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும்,ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். 

இதுகுறித்து குமாரின் உறவினர்கள் தங்களது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு கொடையப்பாக்க கிராமத்தினரே முக்கிய காரணம் எனக்கூறி பாதுகாப்பு அளிக்கக் கோரி புகார்மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement