தமிழகம்

வாசலில் அமர்ந்து தலைசீவிய பெண்! பக்கத்துவீட்டுக்காரர் செய்த மோசமான காரியத்தால் நேர்ந்த துயரம்!!

Summary:

girl dead for neighbour behaviour

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே சருத்துபட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சந்திரன் என்பவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் கிருஷ்ணவேணி அவரது வீட்டுவாசலில் அமர்ந்து தலை வாரிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது வெளியே போக தயாரான சந்திரன் நான் வெளியே போகும்போது இப்படியா தலையை விரித்துபோட்டுகொண்டு உட்கார்ந்திருப்பாய் என சகுனம் பார்த்து கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணவேணி என் வீட்டு வாசலில்தான் உட்கார்ந்து தலை வாருகிறேன். உங்களுக்கு என்ன? என கேட்டுள்ளார்.

girl dead க்கான பட முடிவுஇதனால் ஆத்திரமடைந்த சந்திரன் கிருஷ்ணவேணியை ஆபாசமாக பேசி, அடித்து தாக்கியுள்ளார். இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சந்திரனை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணவேணி அவரது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் நடந்த அவமானத்தை எண்ணி மனம் தளர்ந்த அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் தற்கொலைக்கு காரணமாக இருந்த சந்திரனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement