அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நேர்ந்த பெரும் விபரீதம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து போன சிறுமி!!

அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நேர்ந்த பெரும் விபரீதம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து போன சிறுமி!!


GIRL DEAD BY SCHOOL BUS FRONT OF BROTHER

சேலம் சூரமங்கலத்தில் வசித்து வந்தவர் சையது ரபீக் ஜக்ரியா. இவர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்களது தாயாருடன் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.

 இந்நிலையில் விடுமுறை எடுத்து தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதற்காக சையது சவுதியிலிருந்து தனது  சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

dead

 இந்நிலையில் சமீபத்தில் இவரது இளையமகள் ஆயிஷா சுஹைனா தனது சகோதரருடன் பள்ளிக்கு சென்றுள்ளார் அங்கு அவர் பள்ளி மைதானத்தில் நடந்து சென்றபோது பள்ளி வாகனம் ஒன்று பின்னோக்கி வந்து ஆயிஷாவின் மீது மோதியது. இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி ஆயிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன் கண்முன்னே தங்கை உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததை கண்ட அவரது சகோதரன் துடிதுடித்துபோனான்.

பின்னால் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.