தமிழகம்

கீரை சாப்பிட்ட ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்.! அடுத்தடுத்து நிகழும் துயரங்களால் பீதி!!

Summary:

girl dead after eating curd with spinach

வில்லியனூர் அருகேயுள்ள  மேல்சாத்தமங்கலத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகள் ஆர்த்தி. 28 வயது நிறைந்த இவர் ஆசிரியர் பட்டயபடிப்பு படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆர்த்தி நேற்று மதியம் கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனே ஆர்த்தியை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்தி ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.. டியூ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க சாவடி ஊழியர் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தார். மேலும் நேற்று முன்தினம் நண்டு குழம்பு சாப்பிட்ட முத்துலட்சுமி என்ற கர்ப்பிணி உயிரிழந்தார்.

இப்போது கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை உயிரிழந்தது போன்ற  அடுத்தடுத்த மரணங்கள் பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
 


Advertisement