திருமணமான 8 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!!

Summary:

சென்னை அருகேயுள்ள பனையூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத். 25 வயது நிறைந்த அவர் தனியார்

சென்னை அருகேயுள்ள பனையூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத். 25 வயது நிறைந்த அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சோலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த  சினேகா என்ற 19 வயது பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பிரமோத் மனைவி சினேகாவிடம் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக  கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு சினேகா தனது பெற்றோர் வீட்டிற்கு  சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பிரமோத் சினேகாவிற்கு போன் செய்து பேசியுள்ளார். மேலும் அப்பொழுது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளாராம்.

இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சினேகாவின் தந்தை பிரமோத் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement