தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்! கதவை திறந்த பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரிடி! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

girl commit suicide for stomach pain

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை, பெல்லகெரே கிராமத்தில் வசித்து வந்தவர் ரஞ்சிதா. 17 வயது நிறைந்த இவர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சமீப காலமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. மேலும் இதனால் அவதிப்பட்டு வந்த அவர் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றும் வந்தார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரஞ்சிதா அண்மையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்கள் கதவை திறந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் கதறி துடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே இறுதியாக ரஞ்சிதா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. 

அதில் அவர் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. நான் பலருக்கும் நிறைய கஷ்டம் கொடுத்துவிட்டேன். இதனால் இந்த முடிவை எடுக்கிறேன். எனது அம்மா, அப்பா நண்பர்களை விட்டுப் பிரிந்து செல்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement