ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி! இறுதியாக அண்ணனுக்கு அனுப்பிய மெசேஜ்! அதிர்ச்சி சம்பவத்தின் பகீர் பின்னணி!
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்.இவரது தங்கை விக்னி நாக நந்தினி. இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு செந்தில்நாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. செந்தில்நாதன் கிண்டியில் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்டர்வியூ ஒன்றுக்குச் சென்றபோது நந்தினி மற்றும் செந்தில்நாதனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த காதல் விவகாரம் நாகேந்திரனுக்கு தெரியவந்தநிலையில், தந்தை இல்லாததால் அவரே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணமான சில நாட்களிலேயே மாமனார், மாமியார் நாத்தனார் என அனைவரும் நந்தினியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.மேலும் கார் வேண்டும், நகை வேண்டுமென வரதட்சணை கேட்டும் வந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கணவன் செந்தில்நாதனிடம் கூறிய நிலையில், அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த நந்தினி தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது இரு கால்களும் முறிந்தது.மேலும் பற்கள் அனைத்தும் கொட்டி பலத்த காயமடைந்தார்.
இதனை தொடர்ந்து நாகேந்திரன் புகார் அளித்த நிலையில் போலீசார் செந்தில்நாதனை கைது செய்தனர். மேலும் நந்தினியின் மாமனார், மாமியார், நாத்தனார் அனைவரும் தலைமறைவாகினர். நந்தினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் தனது அண்ணன் நாகேந்திரனுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மெசேஜ் அனுப்பிவிட்டு, பிறகுதான் மாடியிலிருந்து குதித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.