தமிழகம் Covid-19

ஈரோடு மேம்பால ரோட்டில் ஆவி நடமாட்டமா? வைரலாகும் சிசிடிவி வீடியோவால் பெரும்பீதியில் மக்கள்!

Summary:

Ghost in erode road video viral

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் கருங்கல்பாளையம் காவிரி மேம்பாலத்தில் போலீசார் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் அடிக்கடி வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வரும்.

இவ்வாறு சமீபத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மேம்பால சாலையில் வாகனங்களுக்கு இடையே வெள்ளை நிற உருவம் ஒன்று பெரிதாகி அங்குமிங்குமாக நகர்ந்து பின்னர் மறைந்துள்ளது. இதனைக் கண்ட போலீசார்கள் சாலையில் ஆவி நடமாடுவதாக அஞ்சியுள்ளனர்.

மேலும் சிலர் அருகில் இரு சுடுகாடு இருப்பதாகவும், அங்கிருந்து ஆவிகள் நடமாடுவதாகவும்  தகவல்களை பரப்பியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர். 

இந்நிலையில் இதனை கண்ட தொழில் நுட்ப பிரிவு துறையைச் சேர்ந்த சிலர், இது ஆவி இல்லை, கேமராவில் ஏற்படும்  பிரச்சினையால் உருவாகியிருக்கலாம் என கூறியுள்ளனர். ஆனாலும் சிலர் இன்னும் ஆவி அச்சத்திலேயே உள்ளனர். 


Advertisement