அரசியல் தமிழகம்

திருமாவளவனுக்கு சரியான ஆள் இவர்தான்! காயத்ரி ரகுராமின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

Summary:

Gayathri raguram talk about thirumavalavan

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,  குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று பேசினார்.

அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் நடிகையும், நட இயக்குனரும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார்.

அவரது ட்விட்டர் பதிவில், 'இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். 
 


 
மேலும், இதுபோன்ற நபர்களை அடக்குவதற்கு சரியான நபர் ராம்தாஸ் தான் என்றும், அவர் எனக்கு ஆதரவு அளிப்பதோடு விசிகவுக்கு கண்டனம் தெரிவிப்பார் என்றும், என்னை போன்ற பெண்களுக்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

திருமாவளவன் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார் அளித்துள்ளனர்.


Advertisement