தமிழகம் லைப் ஸ்டைல்

குட் நியூஸ்..! இனி வாட்சப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்..! இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி..!

Summary:

Gas refilling using whats app number

தற்போது தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு முன்பதிவு செய்துவரும் நிலையில் இனி வாட்சப் மூலம் முன்பதிவு  செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன் கூறுகையில் தமிழகத்தில் மட்டும் சும்மர் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் 1.36 கோடி பேருக்கு சமையல் எரிவாயு விநியோகிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், இனி பதிவு செய்த தொலைபேசியின் வாட்சப் எண்ணில் இருந்தும் சமையல் எரிவாயுவை முன் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

7588888824 என்ற எண்ணுக்கு நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணின் வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement