மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
இல்லத்தரசிகளுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை... மீண்டும் உயர்ந்த விலை நிலவரம்!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகளை நிர்ணயம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மே 7 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் 3 ரூபாய் உயர்ந்து தற்போது 1,018 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையில் ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.