தமிழகம் லைப் ஸ்டைல்

"கஜா புயலால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிட்டது" ஒரு கிராமத்து இளைஞனின் அழுகுரல்!

Summary:

gaja collapsed on village

நேற்று சழற்றியடித்த கஜா புயலால் நாகை, புதுகை, தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதுதான் கீழப்பட்டி ராசியமங்கலம் என்ற அந்த அழகான கிராமம். ஆலங்குடி தாலுகாவைச் சேர்ந்த இந்த கிராமம் ஆலங்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் ஒரு தீவு போல் தனியாக அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கும் கடல் பகுதியான மல்லிப்பட்டினத்தில் 30 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.

நேற்று அதிராம்பட்டினத்தில் இருந்து பேராவூரணி வழியாக வடகாடு, மாங்காடு என அனைத்து கிராமங்களையும் சூறையாடிய கஜா புயல் ராசியமங்கலத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்த கிராமத்தில் இருந்த அனைத்து ஓட்டு வீடுகளிலும் ஓடுகள் காற்றில் பரந்துள்ளன. கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்று காட்சியளித்த வேம்பு, மா, பலா, தென்னை, வாழை, முந்திர், தேக்கு என பலவகையான மரங்கள் இன்று முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கின்றன.

அதிகமாக ஓட்டு வீடுகளை கொண்ட அந்த கிராமத்தில் அணைத்து ஓட்டு வீடுகளின் கூரைகளும் காற்றில் பறந்துவிட்டன. மின்சாரம் இன்றி, தகவல் தொடர்பு மற்றிலும் துண்டிக்கப்பட்ட இந்த கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்த ஒரு இளைஞர் கொண்டது.

முந்திரி தோப்பு க்கான பட முடிவு

"500 க்கும் மேற்பட்ட கடும்பங்கள் வாழும் எங்கள் கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் தான். ஆறோ, ரரியோ எதுவும் இல்லாமல் வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்தோம். முக்கனிகளான மா, பலா, வாழை என அனைத்தும் முதல் தர சுவையுடன் விளையக்கூடிய மண் எங்கள் மண். ஆனால் நிலத்தடி நீரோ 500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால் பலருக்கு அந்த ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க வசதியில்லை. சிலர் மட்டும் 1000 அடிக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்கள். 

எனவே விவசாயத்தை கைவிட்ட எங்கள் ஊர் மக்களுக்கு முக்கிய தோழிழாக கைக்கொடுத்து முந்திரி சாகுபடி தான். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே விளைச்சல் கொடுக்கும் அந்த முந்திரிக்கு ஆண்டு முழுவதும் பல ரூபாய்களை செலவு செய்து பராமரிப்போம். மேலும் உப பயிர்களாக ஆங்காங்கே பலாமரம், மாமரம், தென்னை மரம், தேக்கு மரங்களை நட்டு வைத்தோம். எதிர்காலத்தில் அவைகள் எங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தோம்.

ஆனால் இன்றோ எந்த மரங்களும் இல்லாமல் அனைத்தும் சாய்ந்து கிடக்கின்றன. மூன்று மணி நேரம் அடித்த கஜா புயலால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. நீர் பற்றாக்குறை உள்ள எங்கள் கிராமத்தில் இனி அதைப்போன்ற மரங்களை நட்டு வளர்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதனால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய்விட்டது. இனி நாங்கள் சாப்பாட்டிற்கு கூட என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது” என புலம்புகிறார் அந்த இளைஞர்.

இதனை படிக்கும் நல்ல உள்ளம் படைத்த நீங்கள் இன்னும் பல நல்ல உள்ளங்களுக்கு பகிர்ந்து அவர்களால் முடிந்த உதவியை இந்த கிராமத்துக்கு செய்துதர உதவிட வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.

தொடர்புக்கு: Tamilspark

ராஜ் - 7904925592, புதுக்கோட்டை 


Advertisement