அரசியல் தமிழகம்

அதிமுகவில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு! மேலும் அதிகரிக்கின்றது அதிமுகவின் பலம்!

Summary:

Further increasing the strength of the AIADMK


விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஆகியோர் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

இரண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் அவர்கள் விக்கிரவாண்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாங்குநேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஆகிய இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களுடன் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 123 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
 


Advertisement